விருதுநகர் அருகேயுள்ள அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி (38). பல ஆண்டுகளுக்கு முன்பாகவே கணவரை விட்டுப் பிரிந்த சீதாலட்சும் தனது மகன் கருப்பசாமி (21)-யுடன் வசித்து வந்தார். கருப்பசாமி விருதுநகரில் ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் தனக்கு சம்பளமாக கிடைக்கும் பணத்தை தனது தாயாரிடம் கொடுத்து வந்தார். ஆனாலும் குடும்பச் செலவிற்கு கூடுதலாக பணம் வேண்டும் என்று கேட்டு கருப்பசாமியுடன், சீதாலட்சுமி அடிக்கடி சண்டை போட்டு வந்தார். தொடர்ந்து தாயார் தன்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால், வீட்டை விட்டு வெளியேறி தனியாக செல்வதாக கருப்பசாமி கூறியுள்ளார்.

மகன் தனியாக செல்கிறேன் என்று கூறியதைக் கேட்ட சீதாலட்சுமி கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். வீட்டில் மகன் இல்லாத நேரம் பார்த்து அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து தகவலறிந்த விருதுநகர் கிழக்கு காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று சீதாலட்சுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment