ராஜபாளையம் அருகே சாலை விபத்து குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற வாலிபர் பரிதாப உயிரிழப்பு. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 3 December 2022

ராஜபாளையம் அருகே சாலை விபத்து குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற வாலிபர் பரிதாப உயிரிழப்பு.


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (21). இதே பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (23). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள். நேற்று இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில், குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றனர். ராஜபாளையம் - தென்காசி சாலையில், தளவாய்புரம் அருகே சென்றபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கல்லில் மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் சிக்கிய இருவரும் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து அந்தப்பகுதி பொதுமக்கள் சேத்தூர் புறக்காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காயமடைந்த இருவரையும் மீட்டு, ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ரமேஷ் உடல்நிலை மிகவும் மோசமடையவே, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனலிக்காமல் ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். 


விபத்து குறித்து சேத்தூர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad