சிவகாசியில், பிரசித்தி பெற்ற கோவில் வருஷாபிஷேக விழா; முன்னாள் அமைச்சருக்கு அழைப்பிதழ் வழங்கிய நிர்வாகிகள். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 21 January 2024

சிவகாசியில், பிரசித்தி பெற்ற கோவில் வருஷாபிஷேக விழா; முன்னாள் அமைச்சருக்கு அழைப்பிதழ் வழங்கிய நிர்வாகிகள்.

photo_2024-01-21_21-28-47

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பேருந்து நிலையம் வளாகத்தில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற ஸ்ரீதுர்க்கைபரமேஸ்வரி அம்மன் கோவில். இந்த கோவில் வளாகத்தில் ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் மற்றும் ஸ்ரீவெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. சிவகாசி மாநகர ஆட்டோ தொழிலாளர் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலின் 8ம் ஆண்டு வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற உள்ளது. 

ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில், அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம், வருஷாபிஷேக விழா அழைப்பிதழை, விழா கமிட்டி நிர்வாகிகள் வழங்கினர். உடன், மேற்கு மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் கணேசன், சிவகாசி கிழக்கு பகுதி நிர்வாகி ஆட்டோ பெரியசாமி உட்பட பலர் இருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad