நரிக்குடி அருகே, தனியார் பள்ளியில் ரோபோட்டிக் வகுப்பறை துவக்கம். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 23 January 2024

நரிக்குடி அருகே, தனியார் பள்ளியில் ரோபோட்டிக் வகுப்பறை துவக்கம்.


நரிக்குடி அருகே தனியார்  பள்ளியில், ரோபோட்டிக் வகுப்பறை துவக்க விழா நடை பெற்றது.  விருதுநகர் மாவட்டம் நரிக்குடி சாலையில், அமைந்துள்ள குட்வில் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில், நவீன இயந்திரவியல துறையில்  முக்கிய பங்கு வகிக்கும் ரோபோ இயந்திரங்களின் செயல்பாடுகள், பயன்படுத்தும் தொழில் நுட்ப முறைகள் குறித்தும் மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ரோபோடிக் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. 

இதன் துவக்க விழாவில், பள்ளித் தாளாளர் பூமிநாதன் குத்து விளக்கேற்றி வகுப்பறைகளை தொடங்கி வைத்தார். முதல்வர் சுபாஷினி முன்னிலை வகித்தார். விழாவில், கலந்து கொண்ட பெற்றோர். களுக்கு ரோபோடிக் வகுப்பறை செயல்பாடுகள் பற்றி மாணவர்கள் எடுத்துரைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad