விருதுநகரில், உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய, மாநில செயலாளர் முத்தரசன் நாடாளுமன்றத்திற்கான 18வது பொதுத் தேர்தல் ஏப்ரல் நடைபெற இருக்கிறது. அதில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது என்றார்.
இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல் நடைபெற இருக்கின்ற தேர்தலில், நம்ம நாட்டினுடைய ஜனநாயகம் காக்கப்படுமா அல்லது கைவிடப்படுமா? நமது அரசியல் அமைப்பு சட்டம் பாதுகாக்கப்படுமா? கைவிடப்படுமா? மதச்சார்பின்மை கொள்கை காப்பாற்றப்படுமா? கைவிடப்படுமா? அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமைப்புகள் பாதுகாக்கப்படுமா அல்லது பலிகிடாக்கப்படுமா என்பன போன்ற நிறைய கேள்விகளை முன்வைக்க வேண்டிய நிலைமை இந்த தேர்தலில் ஏற்பட்டு இருக்கிறது என்றார்.
மேலும் ,பேசிய முத்தரசன் குறிப்பாக பிரதமர் குறித்து தரம் தாழ்ந்த முறையில் விமர்சிக்கும் கூடாது ஏனென்றால் அவர் நாட்டினுடைய பிரதமர். ஆனால், நம்முடைய பிரதமரை பொய் பேசுகின்ற பிரதமர் என்று விமர்சிக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது எனவும், அதற்குக் காரணம் அவர் ஆற்றுகின்ற உரை என விமர்சனம் செய்தார்.
மேலும் ,பேசிய முத்தரசன் திருப்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு திமுக இருக்காது என்று சொன்னார் எனவும், அதற்கு பொருள் என்னவென்றால் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பல கட்சிகள் இயங்கும் முறையை அனுமதிக்க மாட்டோம் என பொருள் என்றார்.
மேலும், தற்போது நாட்டில் பல கட்சிகள் இயங்க அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், பாஜகவின் மோடி பிரதமர் ஆனால் பல கட்சிகள் இயங்குவதற்கு செயல்படுவதற்கு அனுமதிக்க மாட்டோம் எனவும் ,ஒற்றைக் கட்சி தான் இருக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்துவோம் என, மறைமுகமாக பிரதமர் பேசினார் என்றார். மேலும், பேசிய முத்தரசன் பாஜகவின் கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி திமுக காங்கிரஸ் நாங்கள் துடைத்து எறிவோம் என, மோடி பேசுகிறார். துடைப்பம் எங்கள் கூட்டணியில் இருக்கிறது. ஆகவே ,அதை கொண்டு பாஜகவை நாங்கள் துடைத்து எறிவோம் என்றார்.
மற்ற கட்சிகளை பிரதமர் மோடி தரம் தாழ்ந்து பேசுகிறார் என, முத்தரசன் விமர்சனம் செய்தார். மேலும் ,பேசிய முத்தரசன் இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுகிறதா எனவும், சுதந்திர மாக செயல்பட அனுமதிப்பார்களா, ஆனால் நடைமுறையில் வேறு மாதிரி இருக்கிறது என, குற்றம் சாட்டினார். மேலும், இந்த தேர்தல் ஒரு ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்கிற யுத்தம் எனவும் இது ஒரு தேர்தல் போராட்டம் என்றார். எதிர்காலத்தில் சர்வதிகார பாசிச ஆட்சி ஏற்படாமல் தடுத்து நிறுத்தி ஒரு ஜனநாயக ஆட்சி உருவாக்குவதற்கு ஒரு மகத்தான போராட்டமாகும் என்றார்.
மேலும், முத்தரசன் இந்த தேர்தல் என்பது 2வது சுதந்திரப் போர் எனவும் அந்த சுதந்திரப் போர் என்பது அந்நியனை எதிர்த்து போராடினோம் எனவும், தற்போது இருக்கிற ஆட்சி அந்நியன் பின்பற்றிய கொள்கையை பின்பற்றுகிற ஆட்சி எனவும் பிரதமர் மோடி ஹிட்லரை பின்பற்றுகிறார் என, விமர்சனம் செய்த முத்தரசன் அவர், ஜெர்மனியின் ஹிட்லர் நரேந்திர மோடி இந்தியாவின் ஹிட்லர் என்றார்.
மேலும், பேசிய முத்தரசன் எங்கள் அணியில் எந்தவித குழப்பமும் இல்லை இந்த முறை 40க்கு 40 வெற்றி பெறுவோம் என்றார். ஆகவே, மிகுந்த ஒற்றுமையோடும் கொள்கை ரீதியாக எங்கள் அணி இந்த தேர்தலை சந்திக்கும் என்றார். கடந்த தேர்தலில் பாஜக அணியில் ஒரே அணியாக நின்று அவர்கள் இன்றைக்கு பிளவு பட்டு நிற்கிறார்கள் என ,விமர்சனம் செய்தார். ஒரே அணியாக இருந்தபோது எங்களை தோற்கடிக்க முடியாத இந்த சிப்பாய்கள் வருகிற தேர்தலில் நாங்கள் தோற்கடிப்போம் என ,வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறார் கள் என்றார்.
தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் மோடியின் எதிர்ப்பு அலை சென்ற தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் அதிகமாக இருக்கிறது என்றார். ஆகவே, இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் பிஜேபிக்கு எதிராகவும் அதே போல் பிஜேபிக்கு இவ்வளவு காலம் துணை போன அதிமுகவிற்கு எதிராகவும் மக்கள் வாக்களிப் பார்கள் எனவும் எங்கள் இந்தியா கூட்டணியை ஆதரித்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். நாட்டிலும் வெற்றி பெறுவோம் என்றார்.
மேலும், பேசிய முத்தரசன் இந்த தேர்தல் தேதியை தீர்மானிப்பது யார் என கேள்வி எழுப்பினார். மேலும், தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் தீர்மானிக்க வேண்டும் என்றார். ஆனால், தேதியில் எப்படி தீர்மானிக்கப்படுகிறது என்று சொன்னால் பிரதமரின் பிரச்சார வசதிக்கு ஏற்ப தேர்தல் தேதி தீர்மானிக்கப்படுகிறது என, குற்றம் சாட்டிய முத்தரசன் தேர்தல் ஆணையம் தன்னும் தங்களுடைய சுதந்திரமான செயல்பாட்டை இழந்து விட்டது என, விமர்சனம் செய்தார்.
அதே போல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் வரை கட்சிகளுக்கு ஏற்படும் செலவை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என, முத்தரசன் தெரிவித்தார். மேலும், பேசிய முத்தரசன் நாட்டில் தேர்தல் பத்திரம் மூலம் அதிக பத்திரங்களை பெற்று பிஜேபி தான் என்றார்.ஆகவே, முதல் குற்றவாளி பிஜேபி தான் எனவும், மற்ற கட்சிகள்இப்படி ஒரு திட்டம் இருப்பதால் தான் தேர்தல் பத்திரங்களை மற்ற கட்சிகள் வாங்கினார்கள் என்றார்.
முத்தரசன். நாடாளுமன்ற தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நாகப்பட்டினம் திருப்பூர் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரும் 18-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளனர் என, தெரிவித்தார். மேலும், பேசிய முத்தரசன் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஒவ்வொரு முறை விலையேற்றும் போது மட்டும் என்னை நிறுவனங்கள் நிர்ணயம் செய்து கொள்கின்றன என சொல்லும் மத்திய அரசு, விலை குறைக்கப்படும் போது மட்டும் எப்படி மத்திய அரசு என்னை நின் நிறுவனங்களுக்கு உத்தரவிட முடியும் என முத்தரசன் கேள்வி எழுப்பினார்.
தேர்தல் வரும் பின்னே பெட்ரோல் டீசல் விலை குறையும் முன்னே அது மாதிரி சிலிண்டர் விலை குறையும் இது தேர்தலுக்காக நடத்தப்படும் அயோக்கியத்தனமான நாடகம் என ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் விமர்சனம் செய்தார்.
No comments:
Post a Comment