விருதுநகர் மாவட்டத்தில், நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. தேர்தல் விதிமீறல்கள் குறித்த தகவல் மற்றும் புகார்கள் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்களை, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான ஜெயசீலன் வெளியிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் தகவல்கள் மற்றும் புகார்களை 1800 425 2166, 04562 252100, 04562 221301, 221302, 221303 என்ற தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என்று தகவல் வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment